அதிரடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ் .. ஆஸி.அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா


அதிரடியில் மிரட்டிய டி வில்லியர்ஸ் .. ஆஸி.அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா
x

image courtesy:twitter/@WclLeague

தென் ஆப்பிரிக்கா தரப்பில் அதிகபட்சமாக ஏபி டி வில்லியர்ஸ் 123 ரன்கள் குவித்தார்.

லீட்ஸ்,

2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி லீட்சில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் - ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் விளையாடி வருகின்றன.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் ஸ்மட்ஸ் களமிறங்கினர். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்ட இந்த ஜோடியில் ஸ்மட்ஸ் 85 ரன்களில் (53 பந்துகள்) ஆட்டமிழந்தார். ஆனால் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியில் மிரட்டினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 8 சிக்சர்கள் 15 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் (46 பந்துகள்) குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் பின்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் சிடில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 242 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கி உள்ளது.

1 More update

Next Story