

சென்னை,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், தமிழகத்தை சேர்ந்தவருமான தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். 40 வயதான அவர், பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கலை 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே கபீர், ஜியான் என்ற இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், தீபிகா பலிக்கலுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை தினேஷ் கார்த்திக் தனது சமூக வலைதளமான மூலம் பகிர்ந்து கொண்டார். மேலும், தனது மகளுக்கு ‘ராஹா பலிக்கல் கார்த்திக்’ என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் மற்றும் விளையாட்டு உலகினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.