

புதுடெல்லி,
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது.இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸும், கேப்டன் இப்ராஹிம் ஜத்ரானும் பேட்டிங் செய்ய வந்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசை தடுமாறியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், அஸ்மத்துல்லா உமர்சாயின் அரைசதம், ஆப்கானிஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் என்ற ஸ்கோரை எட்ட உதவியது. மேலும் உமர்சாய் 44 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் எடுத்தார்.
வெற்றிக்கு 157 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 156 ரன்கள் அடித்த நிலையில், 13.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா வெற்றிபெற்றது. இதில் அபிஷேக் சர்மா 82 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும் எடுத்தனர்.
தோல்வி தொடர்பாக பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் இப்ராஹிம் சத்ரான் கூறியதாவது,
நாங்கள் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. முதல் மூன்று ஓவர்களில் நல்ல தொடக்கம் கிடைத்தது. அதன் பிறகு எங்களால் சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எதிரணி எங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது
அவர்களது பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இந்திய அணி ஆட்டத்தின் வேகத்தை தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டது. இந்திய அணி சிறந்த பீல்டிங் அணிகளில் ஒன்று. என தெரிவித்தார்..என தெரிவித்துள்ளார்.