

ராய்ப்பூர்,
இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 3 போட்டி கள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது 20 ஓவர் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்றிரவு நடந்தது. இந்தியா-ஜிம் பாப்வே பெண்கள் அணிகள் சர்வதேச கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மல்லுக் கட்டுவது இதுேவ முதல் முறையாகும். சமீபத்தில் மறைந்த ஜிம்பாப்வே முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும். நடுவருமான சாரா தம்பனேவானாவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரு அணியினரும் கையில் கருப்பு பட்டை கட்டியிருந்தனர். 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்மிர்தி மந்தனா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 114 ரன்னில் கட்டுப்படுத்தப்பட் டது. ஷரேன மேயர்ஸ் 43 ரன்களும், கெல்லிஸ் என்ட்லோவு 42 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் நந்தனி ஷர்மா 2 விக்கெட்டும், கிரந்தி கவுட், அருந்ததி ரெட்டி, ஸ்ரீசரனி தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 19 ரன்னுக்குள் புதிய கேப்டன் ஸ்மிர்தி மந்தனா (9 ரன்), அனுஷ்கா ஷர்மா (4 ரன்), ஹர் மன்பிரீத் கவுர் (1 ரன்), ஷபாலி வர்மா (4 ரன்) ஆகியோரின் விக்கெட்டு களை இழந்து தள்ளாடியது. இதன் பின்னர் அறிமுக வீராங்கனை நிக்கி பிர சாத்தும், தீப்தி ஷர்மாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து காப்பாற்றி யதுடன், வெற்றிப்பாதைக்கும் அடித்தளமிட்டனர். தீப்தி ஷர்மா தனது பங் குக்கு 49 ரன்கள் (37 பந்து, 8 பவுண்டரி) விளாசினார். அடுத்து வந்த ரிச்சா கோஷ் (7 ரன்) சிக்சருக்கு முயற்சித்து கேட்ச் ஆனார்.இந்திய அணி 15.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்து 4 விக் கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நிக்கி பிரசாத் 39 ரன்களுடனும் (35 பந்து, 6 பவுண்டரி). அருந்ததி ரெட்டி 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
தோல்வி தொடர்பாக பேசிய ஜிம்பாப்வே கேப்டன் ஜோசபின் என்கோமோ கூறியதாவது,
பவர்பிளே முடிவதற்குள் இந்திய அணியை 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளிய எங்களது பந்துவீச்சையும், வீரர்களின் போராட்ட குணத்தையும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எந்த நாளாக இருந்தாலும், இதுபோன்ற செயல்பாட்டை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.
நாங்கள் எங்களது திட்டங்களை எளிமையாக வைத்துக்கொண்டோம் என்று நினைக்கிறேன். எங்களது பீல்டிங் மீதும் நம்பிக்கை வைத்து செயல்பட்டோம்.
இந்தப் போட்டியில் நிறைய பந்துகளில் ரன்கள் எடுக்காமல் விட்டுவிட்டோம். ஒன்று அல்லது இரண்டு ரன்களாக மாற்ற முடிந்தால், எங்களது ஆட்டம் இன்னும் சிறப்பாக இருக்கும். அடுத்த போட்டிக்குத் தயாராகவும் அது உதவும்.என தெரிவித்தார்.