நியூசிலாந்துக்கு எதிரான தோல்வி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை இழந்த இந்தியா

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.
image courtesy; AFP
image courtesy; AFP
Published on

துபாய்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. இந்த தொடரில் பெங்களூரு மற்றும் புனேவில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி இருந்தது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் கடந்த 1ம் தேதி தொடங்குகிறது.

இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆட்டத்திலும் இந்தியா தோல்வி கண்டு தொடரை முழுமையாக இழந்தது. இந்நிலையில், இந்தியா - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தோல்விக்கு முன்னர் முதல் இடத்தில் இருந்த இந்தியா (58.33 சதவீதம்) தற்போது 2வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) 5வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது.

இந்தப்பட்டியலில் 3வது இடத்தில் இலங்கை (55.56 சதவீதம்) அணியும், 5வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா (54.17 சதவீதம்) அணியும் உள்ளன. இதைத்தொடர்ந்து 6 முதல் 9 இடங்களில் முறையே இங்கிலாந்து (40.79 சதவீதம்), பாகிஸ்தான் (33.33 சதவீதம்), வங்காளதேசம் (27.50 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகளும் உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com