கடைசி லீக் போட்டியிலும் தோல்வி: ஹர்திக் பாண்ட்யா கூறியது என்ன.?

நாங்கள் பவர்பிளேயில் நிறைய விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவுக்கு காரணம் என ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
கடைசி லீக் போட்டியிலும் தோல்வி: ஹர்திக் பாண்ட்யா கூறியது என்ன.?
Published on

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தை வெற்றியோடு முடிக்க எண்ணியது. ஆனால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது;

”பந்துவீச்சில் நாங்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். நாங்கள் 10-15 அதிகம் விட்டுக்கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். ஆடுகளமும் மிகவும் சூடாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர். கடைசி 5 ஓவர்களில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்ததும், ஆட்டத்தில் எங்களின் பின்னடைவுக்கு காரணம்.

இந்த இலக்கு துரத்திப் பிடிக்கக்கூடிய இலக்குதான். ஆனால் நாங்கள் பவர்பிளேயில் நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வர சிரமமாக இருந்தது. நான் பேட் செய்யச் சென்றபோது, ​​ஆடுகளம் நன்றாக இருந்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆடுகளம் ஒரே மாதிரியாகவே இருந்தது. பந்து பேட்டிற்குச் நன்றாக வந்தது.”

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com