மும்பைக்கு எதிரான தோல்வி... குஜராத் கேப்டன் சுப்மன் கில் கருத்து


மும்பைக்கு எதிரான தோல்வி... குஜராத் கேப்டன் சுப்மன் கில் கருத்து
x

Image Courtesy: @IPL 

தினத்தந்தி 31 May 2025 5:15 AM IST (Updated: 31 May 2025 5:15 AM IST)
t-max-icont-min-icon

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் குஜராத் தோல்வி கண்டு வெளியேறியது.

முல்லன்பூர்,

ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.

மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது. தோல்வி கண்ட குஜராத் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் குஜராத் கேப்டன் சுப்மன் கில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கிரிக்கெட்டின் அற்புதமான ஆட்டம், நாங்கள் சரியாகச் செய்தோம். கடைசி மூன்று, நான்கு ஓவர்கள் எங்கள் வழியில் செல்லவில்லை, ஆனால், இன்னும் இது ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டம். மூன்று எளிய கேட்சுகளை, குறிப்பாக பவர்பிளேயில் தவறவிட்டபோது எளிதாக இல்லை. பந்துவீச்சாளர்களுக்கு கட்டுப்படுத்துவது எளிதல்ல.

சாய் மற்றும் வாஷிங்டனிடம் நான் சொன்னது ஒன்றே ஒன்று தான். நீங்கள் விளையாட விரும்பும் ஆட்டத்தை விளையாடுங்கள். ஒரே இலக்குதான். எங்களுக்கு பல நல்ல விஷயங்கள் கிடைத்துள்ளன. ஆனால், கடைசி 2-3 ஆட்டங்களில் எங்களுக்கு சாதகமாக பல விசயங்கள் அமையவில்லை.

ஆனால் அனைத்து வீரர்களுக்கும், குறிப்பாக சாய்க்கு பாராட்டுகள் - அவர் அற்புதமாக இருந்தார். இந்த பிட்சில் 210 ஒரு சமமான ஸ்கோர் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story