பெங்களுரு - கொல்கத்தா போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்

57-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

பெங்களுரு - கொல்கத்தா போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம்
Published on

ராய்ப்பூர்,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியா வின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் தங்கள் பிரி வில் உள்ள அணிகளுடன் ஒரு முறை, எதிர்பிரி வில் அங்கம் வகிக்கும் அணிகளுடன் தலா 2 முறை என மொத்தம் 14 ஆட்டங்களில் விளை யாட வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற் றுக்கு முன்னேறும்.

'பிளே-ஆப்' சுற்றை எட்டுவதற்கு 8-9 வெற்றிகள் தேவையாகும். இன்னும் எந்த அணியும் 'பிளே-ஆப்' சுற்றை உறுதி செய்யவில்லை. 'பிளே -ஆப் வாய்ப்பை பெற 8 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்த போட்டி தொடரில் சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று நடைபெறும் 57-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, 3 முறை சாம் பியனான கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்ப்பட்டுள்ளது. ராய்ப்பூரில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏறப்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com