சென்னைக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சென்னைக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு
Published on

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங் கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேபிட்டல்சை எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com