

அபுதாபி
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி பிற அணிகளின் முடிவை பொறுத்தை அடுத்த சுற்று எட்ட முடியும்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி முதலில் பேட் செய்கிறது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறுவதுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தை உறுதி செய்யும். தோல்வி அடையும் அணிக்கு, நாளை நடக்கும் ஐதராபாத் அணிக்குரிய இறுதி லீக் ஆட்டத்தின் முடிவை பொறுத்து பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா? என்பது தெரிய வரும்.