

புதுடெல்லி,
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் கடைசி லீக் ஆட்டம் ஆகும். பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த மோதலில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். தோற்றால் வெளியேறுவதை தவிர வழியில்லை. அது மட்டுமின்றி 2-3 அணிகள் 14 புள்ளிகளுடன் இருக்க வாய்ப்பு இருப்பதால் ரன்ரேட்டையும் வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதியது.
மும்பை அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 174 ரன்கள் அடித்து மும்பைக்கு 175 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
இதனையடுத்து பேட்டிங் செய்து விளையாடிய மும்பை அணியின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே இருந்தது. மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர் லிவிஸ் மட்டும் போராடி பார்த்தார். மற்றவர்கள் எல்லாம் வந்த வேகத்தில் அவுட் ஆகி திரும்பினர். பின்னர் பாண்டியாவும், பென்கட்டிங்கும் அணிக்கு ரன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்களுடைய முயற்சி எதுவும் வெற்றியடையவில்லை. மும்பை அணி 19.3 ஓவர்களிலே அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்களில் அவுட் ஆனது. 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெல்லி அணி மும்பையின் கொண்டாட்டத்தை சீர்குலைத்து விட்டது. மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறியது.