டெல்லி பிரீமியர் லீக்: கேப்டனாக களமிறங்கும் ஹர்ஷித் ராணா


டெல்லி பிரீமியர் லீக்: கேப்டனாக களமிறங்கும் ஹர்ஷித் ராணா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 July 2025 9:30 AM IST (Updated: 22 July 2025 9:30 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்ஷித்த் ரானா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் (DDCA) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் 6 அணிகள் மட்டுமே பங்கேற்றன. இந்நிலையில், நடப்பு சீசனில் 8 அணிகள் பங்கேற்க உள்ளது.

இந்த தொடர் ஆகஸ்ட் 2, முதல் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி வீரர் ஹர்ஷித்த் ரானா நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணி விவரம்:-ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ், சர்தக் ரஞ்சன், வைபவ் கண்ட்பால், பரனவ் ராஜ்வன்ஷி, ககன் வாட்ஸ், யாஷ் பாட்டியா, யாஷ் தபாஸ், அர்னவ் புக்கா, யஜாஸ் சர்மா, தீபன்ஷு குலியா, தீபக் காத்ரி, விகாஸ் தீட்சித், சம்யக் நஜைன், சித்தார்த்தா நக்ராப் சோலங்கி, நூர் ரஜோ, சோலங்கி. சிங், சித்தாந்த் பன்சால், ஆர்யன் செஜ்வால்.

1 More update

Next Story