

ஜெய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூ ரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 225 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 226 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியா சத்தில் அபார வெற்றி பெற்றது.
பின்னர் பேசிய டெல்லி அணி கேப்டன் அக்சர் படேல் கூறியதாவது,
எங்கள் ரசிகர்களுக்கு துயரச் சம்பவம் ஏற்பட்டது. அவர்களின் இழப்பிற்காக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை அவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்; அவர்கள் எங்கள் டெல்லி அணி குடும்பத்தின் இரண்டு உறுப்பினர்கள்.என தெரிவித்தார்.
யக்யா பாட்டியா (20) மற்றும் அபவ் பாட்டியா (14) ஆகியோர் டெல்லியில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது சாலை விபத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.