

புதுடெல்லி,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. இந்நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக தொடக்க போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டது.
ஸ்டார்க் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என தகவல் வெளியான நிலையில், அடுத்த 3 போட்டிகளிலும் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி உடற்தகுதி சான்றிதழ் கொடுக்காததால் அவர் அடுத்த 3 போட்டிகளிலும் விளையாட மாட்டார்.