தியோதர் கோப்பை கிரிக்கெட்: தெற்கு மண்டலம் வெற்றியுடன் தொடக்கம்

தியோதர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுச்சேரி,

தியோதர் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. இதில் வடக்கு மண்டலத்திற்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தெற்கு மண்டல அணி 8 விக்கெட்டுக்கு 303 ரன்கள் குவித்தது. ரோகன் குன்னுமால் (70 ரன்), கேப்டன் மயங்க் அகர்வால் (64 ரன்), விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (72 ரன்) அரைசதம் அடித்தனர்.

பின்னர் வடக்கு மண்டலம் அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 28 ஓவர்களில் 246 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதை நோக்கி ஆடிய வடக்கு மண்டலம் 23 ஓவர்களில் வெறும் 60 ரன்னில் அடங்கியது. இதனால் தெற்கு மண்டலம் 185 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் வித்வாத் கவீரப்பா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மற்ற ஆட்டங்களில் கிழக்கு மண்டலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய மண்டலத்தையும், மேற்கு மண்டலம் 9 விக்கெட் வித்தியாசத்தில் வடகிழக்கு மண்டலத்தையும் தோற்கடித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com