ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியை மைதானத்தில் மனைவியுடன் பகிர்ந்த சாஹல்- வைரல் வீடியோ

சாஹல் அவரின் மனைவியிடம் உரையாடும் வீடியோவை அணி நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.
Image Courtesy : Twitter
Image Courtesy : Twitter
Published on

மும்பை,

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி பட்லர் அதிரடியால் 217 ரன்கள் குவித்தது.

பின்னர் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி வெற்றிக்கு மிக அருகில் சென்ற நிலையில் 17-வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் ஒரே ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் (85 ரன்கள்), கம்மின்ஸ் , மாவி விக்கெட்களை (ஹாட்ரிக்) வீழ்த்தி போட்டியை ராஜஸ்தான் பக்கம் திருப்பினார்.

இதனால் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணி தரப்பில் யுஸ்வேந்திர சாஹல் 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார்.

இந்த போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களுக்கான ஊதா நிற தொப்பியை பெற்றார். இந்த போட்டியை காண சாஹல் மனைவியும் நடன இயக்குனருமான தனஸ்ரீ வர்மா வந்து இருந்தார். 

போட்டி முடிந்த பிறகு சாஹல் அவரின் மனைவியிடம் உரையாடும் வீடியோவை ராஜஸ்தான் அணி நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

அதில் தனஸ்ரீ வர்மா, " ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது மகிழ்ச்சியா என கேட்க " அதற்கு சாஹல் "ஆம் , முதல் ஹாட்ரிக் " என புன்னைகையுடன் தெரிவித்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com