ஒருநாள் போட்டி : தொடக்க ஜோடியாக புதிய சாதனை படைத்த ரோகித் சர்மா - தவான்

தொடக்க ஜோடியாக 5000 ரன்களை கடந்து ரோகித் சர்மா - தவான் சாதனை படைத்துள்ளனர்.
Image Tweeted By @BCCI
Image Tweeted By @BCCI
Published on

லண்டன்,

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடரையும் வெல்லும் நோக்கத்தில் இந்திய அணி களமிறங்கியது. இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா 76 ரன்களுடனும் தவான் 31ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் தொடக்க ஜோடியாக ஒருநாள் போட்டிகளில் 5000 ரன்களை கடந்த 2-வது இந்திய ஜோடி என்ற சாதனையை ரோகித் சர்மா - தவான் படைத்தனர்.

முதல் இடத்தில் சச்சின் - கங்குலி ஜோடி உள்ளனர். ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலிக்கு பிறகு ரோகித் மற்றும் தவான் இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான தொடக்க ஜோடிகளாக இருக்கின்றனர்.

இவர்களுக்கு முன்னதாக கங்குலி மற்றும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸில் 6609 ரன்கள் எடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக ரோகித்-தவான் ஜோடி நான்காவது இடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் ஆஸ்திரேலியா அணியின் கில்கிறிஸ்ட் மற்றும் மேத்யூ ஹெய்டன் 114 இன்னிங்ஸில் 5372 ரன்களும் 3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஜோடிகளான கார்டன் கிரீனிட்ஜ் மற்றும் டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் 102 இன்னிங்ஸில் 5150 ரன்களும் எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com