ரன் குவிக்க திணறும் தவன்: தென்னாப்பிரிக்க தொடரில் இடம் கிடைக்குமா?

தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் தவன் ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

இந்திய அணி டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

டெஸ்ட் தொடருக்கு விராட் கோலியும், ஒருநாள் மற்றும் டி20 தொடாகளுக்கு ரோகித் சாமாவும் கேப்டனாக உள்ளனா. இதில் டெஸ்ட் தொடருக்கான அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது ஒருநாள் தொடருக்கான அணி தோவுக்கான பரிசீலனைகள் நடைபெற்று வருகிறது.

அதில் குறிப்பாக அதிரடி தொடக்க வீரரான ஷிகா தவனுக்குரிய வாய்ப்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலையில் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து தொடரில் பங்கேற்றிருந்த வேளையில், இளம் வீராகள் அடங்கிய மற்றொரு அணிக்கு தலைமை தாங்கி இலங்கை சென்றா தவன். அங்கு ஒருநாள் தொடரையும் கைப்பற்றினா.

ஆனால், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் தவனின் பேட்டிங் சற்று கவலைக்குரியதாக உள்ளது. தென் ஆப்பிரிக்க தொடா எதிவரும் நிலையில், இந்த தொடரில் வரிசையாக 0, 12, 14, 18 ரன்களுக்கு ஆட்டமிழந்திருக்கிறா.

ஆனால், மறுபுறம் இளம் வீராகளான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயா போன்றோ விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தற்போது இருவரும் தங்கள் முழூ திறமையை வெளிப்படுத்தி வரும் நிலையில், இருவருக்கும் இந்திய அணியில் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தவனின் மோசமான பேட்டிங் காரணமாக அவர் அணியில் சேர்க்கப்படுவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com