

சென்னை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங் களில் நடைபெறுகிறது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத் தில் இன்றிரவு அரங்கேறும் தொடக்க ஆட்டத்தில் பெங்களூரு அணி, முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 வாரங்களுக்கு தோனி விளையாடமாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அறிவித்துள்ளது. காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு கரணமாக 2 வாரங்களுக்கு தோனி விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில்,தோனி தொடர்பாக பேசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் கூறியதாவது,
தோனி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் அணி விவாதங்களில் நேரடியாகக் கலந்துகொள்வதில்லை. பிளெமிங்கும் நானும் தான் விஷயங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று விரும்புவார். நீங்கள் என் ஆலோசனையைக் கேட்டாலும், அதைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை' என்று எங்களிடம் கூறுவார்.
எங்கள் யோசனைகள்தான் அணியை வழிநடத்த வேண்டும் என்று அவர் நம்புகிறார். எது 'சரி', எது 'தவறு' என்பதில் அவர் கவனம் செலுத்துவதில்லை - ஒரு சிக்கலைக் கண்டால், அதை எப்படித் தீர்ப்பது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார். அவரது அந்தஸ்தில் உள்ள ஒருவர் பின்வாங்கி, நாங்கள் வழிநடத்துவோம் என்று நம்புவது ஒரு மிகப்பெரிய விஷயம். என தெரிவித்தார்.