

சென்னை,
இந்தியாவில் ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு தோனிக்கு உள்ளது என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்தியாவில் டி20 உலகக் கோப்பைக்காக தோனி பல இடங்களுக்குப் பயணம் செய்து, சில போட்டிகளின் போது மைதானத்திலும் இருந்தார். அப்போதெல்லாம் தோனிக்கு இந்தியாவில் மிகப்பெரிய கவுரவம் கிடைக்கிறது.
சச்சினுக்குத்தான் இதுபோன்ற மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. ஆனால், தற்போது தோனியும் அப்படியான நிலையில் இருக்கிறார். இந்தியாவில் அவருக்கு ஒரு பிரதமருக்குரிய பாதுகாப்பு உள்ளது. அவர் இந்தியா முழுவதும் எங்கு பயணம் செய்தாலும், அவருக்கு பாதுகாப்பாக உண்மையான ஆர்மி இருப்பது போலவே இருக்கிறது. என தெரிவித்துள்ளார்.