

இந்திய அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான டோனி எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரர். அவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் உண்டு.
இதனையடுத்து டோனி கேப்டனாக பொறுப்பேற்று 12 ஆண்டுகள் நிறைவு அடைந்திருக்கும் இந்நிலையில் #12YEARSOFCAPTAINDHONI என்ற ஹேஸ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர்.
கடந்த 2007 ஆம் ஆண்டு கேப்டனாக பதவியேற்று கிரிக்கெட் உலகில் தோனி செய்த சாதனைகள், அணிக்காக இறுதிவரை போராடி வெற்றி தேடி தந்த ஆட்டங்களின் வீடியோ காட்சிகள் , புகைப்படங்களை பதிவிட்டு டோனி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.