

சென்னை,
10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். ஒவ்வொரு அணி தொடர்பான புதிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ். தோனியும், பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தீவிர பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த சீசனுக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், புதிய ஜெர்சியில் தோனி இருக்கும் புகைப்படத்தை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது.