தீவிர பயிற்சியில் தோனி... ரசிகர்கள் உற்சாகம்

தோனி களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தீவிர பயிற்சியில் தோனி... ரசிகர்கள் உற்சாகம்
Published on

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜாம்பவான் வீரரான தோனி காயம் காரணமாக நடப்பு சீசனில் ஒரு போட்டியிலும் கூட விளையாடவில்லை. தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்காகவே காத்திருக்கும் அவரது ரசிகர்கள் பலரும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காயத்தில் இருந்து மீண்ட தோனி, கடைசியாக நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலேயே களமிறங்குவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அன்றைய போட்டியில் விளையாடவில்லை. இது சென்னை ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், வருகிற 23ஆம் தேதி மும்பை அணிக்கு எதிராக நடைபெற உள்ள முக்கியமான லீக் ஆட்டத்தில் தோனி களமிறங்குவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், தோனி தீவிர விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோவை சென்னை அணி வெளியிட்டுள்ளது. இதனால் தோனி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார் என்பது உறுதியாகியுள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com