“தோனி சொன்னா பாராட்டு… நான் சொன்னா டிரோல்” - அஸ்வின் ஆதங்கம்

ரசிகர்களின் அணுகுமுறைகள் குறித்து தனது ஆதங்கத்தை ரவிச்சந்திரன் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார்.
“தோனி சொன்னா பாராட்டு… நான் சொன்னா டிரோல்” - அஸ்வின் ஆதங்கம்
Published on

சென்னை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும், 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியவருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ரசிகர்களின் அணுகுமுறைகள் குறித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சமீபத்திய ஒரு பேட்டியில் அவர் பேசுகையில், இந்திய கிரிக்கெட்டில் சில வீரர்களுக்கு வழங்கப்படும் ரசிகர் ஆதரவும், சிலருக்கு கிடைக்கும் விமர்சனங்களும் சமநிலையற்றதாக இருப்பதாக மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

அப்போது அவர் கூறியதாவது:

“ஆர்சிபி ரசிகர்கள் ரொம்பவும் விசுவாசமானவர்கள்-னு ‘தல’ தோனி ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருக்கார் என படித்தேன். இதையேதான் போன வருஷம் நானும் சொன்னேன். நான் மட்டும் பாம்பு படை வெச்சவனாம். அவர் ‘தல தல’ தானாம். இப்படியெல்லாம் கேக்கணும்னு ஆசை. ஆனா கேட்க முடியாது”  என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com