சென்னை அணியில் தோனி நிரந்தரமாக இருக்க வேண்டும்: சிஇஓ நம்பிக்கை

அவர் விளையாடுவாரா என்பதில் வழக்கம் போல் 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.
சென்னை அணியில் தோனி நிரந்தரமாக இருக்க வேண்டும்: சிஇஓ நம்பிக்கை
Published on

சென்னை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை தொடர்ந்து 3-வது முறையாக 'பிளே-ஆப்' சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு போட்டியை 6 வெற்றி, 8 தோல்வி என 12 புள்ளிகளுடன் நிறைவு செய்தது.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள முன்னாள் கேப்டன் 44 வயதான தோனி, இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட ஆடவில்லை. பின்னங்காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்படும் அவர் முழு உடல்தகுதியை எட்டவில்லை. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளா னார்கள். அடுத்த சீசனில் அவர் விளையாடுவாரா என்பதில் வழக்கம் போல் 'சஸ்பென்ஸ்' நீடிக்கிறது.

இந்த நிலையில் தோனி குறித்து சென்னை சூப்பர் கிங்சின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் (சிஇஓ) கூறுகையில்,

'2027-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு தோனி திரும்புவார் என்று நம்புகிறேன். தனது கடைசி ஐ.பி.எல். ஆட்டத்தை சென்னையில் ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இப்போதைக்கு எதுவும் அவரிடம் விவாதிக்கவில்லை. அவர் சம்பந்தமான எந்த ஒரு முடிவையும் அவர் தான் எடுக்கிறார். நாங் கள் அதை மதிக்கிறோம். சென்னை அணியில் ஏதாவது ஒரு வழியில் தோனி நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறோம். ஒரு வீரராக, பயிற்சியாளர் அல்லது ஆலோசகராக என எதை அவர் விரும்புகிறாரோ அந்த வகையில் தொடர வேண்டும். ஆனால் இது குறித்த எந்த முடிவும் அவரையே சார்ந்தது.

ருதுராஜ் கெய்க்வாட் முதல் 3-4 ஆண்டுகள் தோனியை நெருக்கமாக கவனித்த பிறகே அவரிடம் இருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தோனியும், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கும் அவரை ஒரு அமைதியான கேப்டனாக வார்த்தெடுத்துள்ளனர். வரும் ஆண்டுகளில் அந்த குணாதிச யங்களை அவர் இன்னும் சிறப்பாக வெளிப்படுத்துவார் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com