ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும்: கில்கிறிஸ்ட்


ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும்:  கில்கிறிஸ்ட்
x

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது

சென்னை,

10 அணிகள் இடையிலான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரின் 49-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 9 போட்டியில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வி கண்டு புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. எஞ்சிய 5 ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் புள்ளிகள் பட்டியலில் கவுரவமான இடத்தை பிடிக்கும்.

இந்த நிலையில் ஐபிஎல் போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ,

தோனி நிரூபிப்பதற்கு எதுவுமே இல்லை. அவருக்கு என்ன செய்வது என்று தெரியும், அவர் இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட வேண்டிய அவசியம் இல்லை . நான் உங்களை நேசிக்கிறேன் தோனி. நீங்கள் ஒரு சாம்பியன். என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story