

ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே-ஆப் வாய்ப்பை இழந்துள்ளது. இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்கும் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் மும்பை இந்தியன்ஸ் அதிகாரபூர்வப் பக்கத்தைப் பின்தொடர்வதை நிறுத்திவிட்டதாகவும் பரபரப்பு கிளம்பியது.
எனினும், இந்த தகவல் முற்றிலும் வதந்தி என்று தெரியவந்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா இன்னும் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரபூர்வப் பக்கத்தைப் பின்தொடர்ந்து வருகிறார். ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாவில் 151 அக்கவுண்ட்களை பின் தொடர்கிறார். அதில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது.