

கெபேஹா,
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நெருக்கடியான சூழ்நிலையிலும் சிறப்பாக விளையாடி 179 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி 12 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதுடன், பின்னர் 110 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது. அப்போது பொறுப்புடன் விளையாடிய பவுமா, 334 பந்துகளைச் சந்தித்து 18 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உட்பட 179 ரன்கள் குவித்தார். அவருக்கு மார்கோ யான்சன் 85 ரன்களும், சைமன் ஹார்மர் 82 ரன்களும் எடுத்து சிறப்பான ஆதரவு அளித்தனர். இதனால் தென்னாப்பிரிக்க அணி 425 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.
இது தொடர்பாக தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது,
கடினமான சூழ்நிலைகளில் தனது சிறந்த ஆட்டம் வெளிப்படுகிறது. அத்தகைய சூழ்நிலைகளை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன். அந்தச் சூழ்நிலைகள் என்னுள் இருக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வருவதாகத் தெரிகிறது. விளையாடும் அணுகுமுறையைப் பொறுத்தவரை, இந்த முறையும் எந்த மாற்றமும் இல்லை. நான் எப்போதும் அதே அணுகுமுறையைத்தான் பின்பற்றி வந்திருக்கிறேன். ஆட்டத்தில் முழுமையாக ஈடுபட்டு, உறுதியுடன் விளையாடுவது.என தெரிவித்தார்.