டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஜூன் கடைசியில் தொடங்க திட்டம்

6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஜூன் மாதம் கடைசியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த போட்டிக்கு நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், இளம் வீரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. நகரங்கள் மட்டுமின்றி கிராம அளவிலும் திறமையான வீரர்களை அடையாளம் காண்பதற்கு இந்த போட்டி உதவிகரமாக இருப்பதுடன், அவர்கள் ஐ.பி.எல். போன்ற பெரிய போட்டியில் நுழைவதற்கும் அடித்தளமாக விளங்குகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் கடந்த ஆண்டு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.இந்த நிலையில் 6-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரை ஜூன் மாதம் கடைசியில் தொடங்கி ஜூலை இறுதிக்குள் நடத்தி முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. போட்டிக்கான இடம் மற்றும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையம் (பயோ பபுள்) உருவாக்குவது குறித்து கொரோனா தாக்கத்தின் நிலைமையை பொறுத்து உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.

டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்தும் விஷயத்தில் அந்த தொழில்நுட்பத்தின் வசதிகள் மற்றும் போதுமான ஸ்பான்சர்ஷிப் கிடைப்பதை பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும். மேலும் இந்த போட்டியில் தற்போது நடைமுறையில் இருக்கும் அணிகளுக்கான வீரர்கள் ஒதுக்கீடு முறையை தொடரலாமா அல்லது ஐ.பி.எல். போட்டி போன்று வீரர்களை ஏலத்தில் எடுக்கலாமா? என்பது குறித்தும் போட்டி அமைப்பாளர்கள் ஆலோசித்து வருவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com