

சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித், அணித்தேர்வில் தலையிடுவதாகவும், தனக்கு பிடித்தமான வீரர்களுக்கு களம் காணும் அணியில் வாய்ப்பு கொடுப்பதாகவும் சில முன்னாள் வீரர்களும், ஊடகத்தினரும் விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து ஸ்டீவன் சுமித்திடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, எனக்கு பிடித்தமானவர்களை அணிக்கு தேர்வு செய்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. யாரும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அது பற்றி எனக்கு கவலையில்லை. அணித்தேர்வில் தலையிடுவதற்கு நான் ஒன்றும் தேர்வாளர் கிடையாது. அதே சமயம் எனது பார்வையில் சில விஷயங்களை தேர்வாளர்களிடம் சொல்வேன் என்றார்.