2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருது வென்றவர் யார் தெரியுமா..?

2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது.
2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருது வென்றவர் யார் தெரியுமா..?
Published on

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், டி20 அணிகள் மற்றும் சிறந்த வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. ஆண்டு முழுவதும் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்ட விதத்தை கணக்கில் கொண்டு இந்த கவுரவத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 வீராங்கனை விருதுக்கு 4 பெயர்களை ஐ.சி.சி. பரிந்துரைத்திருந்தது. அதன்படி இலங்கையின் சமாரி அத்தபத்து, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வோர்ட், நியூசிலாந்தின் மெலி கெர், அயர்லாந்தின் ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இவர்களில் 2024-ம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனையாக நியூசிலாந்தின் மெலி கெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு 18 போட்டிகளில் விளையாடி 387 ரன்கள் மற்றும் 29 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com