ஐ.சி.சி. நவம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றது யார் தெரியுமா..?


ஐ.சி.சி. நவம்பர் மாத சிறந்த வீரர் விருதை வென்றது யார் தெரியுமா..?
x

image courtesy:ICC

சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் சிமோன் ஹார்மர், முகமது நவாஸ் மற்றும் தைஜுல் இஸ்லாம் இடம்பெற்றிருந்தனர்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாத சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய பரிந்துரை பெயர் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் மாத சிறந்த வீரர் விருதுக்கான பெயர் பட்டியலில் சிமோன் ஹார்மர் (தென் ஆப்பிரிக்கா), முகமது நவாஸ் (பாகிஸ்தான்) மற்றும் தைஜுல் இஸ்லாம் (வங்காளதேசம்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் நவம்பர் மாத சிறந்த வீரராக சிமோன் ஹார்மர் (தென் ஆப்பிரிக்கா) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் நவம்பர் மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான பெயர் பட்டியலில் ஷபாலி வர்மா (இந்தியா), திபாட்சா புத்தவோங் (தாய்லாந்து) மற்றும் ஈஷா ஒசா (யுஏஇ) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இவர்களில் நவம்பர் மாத சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஷபாலி வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

1 More update

Next Story