டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் - சிஎஸ்கே இளம் வீரருக்கு தோனி அறிவுரை...!

சென்னையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

சென்னை,

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே, மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது. இதன் மூலம், மும்பை அணிக்கு எதிராக 11 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை சேப்பாக்கத்தில் வெற்றியை பதிவு செய்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இந்த நிலையில் போட்டி முடிந்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி கடைசி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய பதிரனாவை பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது,

பதிரனா சிறப்பாக பந்து வீசினார். என்னை பொறுத்தவரை பதிரினா அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சொல்லப்போனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட் அருகில் கூட வர வேண்டாம் . ஒயிட்-பால் கிரிக்கெட்டில் கூட ( ஒரு நாள் கிரிக்கெட்) , அவர் குறைவாக விளையாடலாம்.

அதே வேளையில் நல்ல உடற்தகுதியுடன் அவர் ஐசிசி போட்டிகளில் விளையாடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவர் இலங்கைக்கு பெரும் சொத்தாக இருப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com