இரட்டை சதத்தை நழுவவிட்டார், கருணாரத்னே

இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் (பகல்-இரவு போட்டி) நேற்று முன்தினம் தொடங்கியது.
இரட்டை சதத்தை நழுவவிட்டார், கருணாரத்னே
Published on

துபாய்,

நிதானமாக பேட் செய்து முதல் நாளில் 3 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்திருந்த இலங்கை அணி, 2-வது நாளிலும் கணிசமாக ஆதிக்கம் செலுத்தியது. இரட்டை சதத்தை நோக்கி வேகமாக பயணித்த தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே (196 ரன்) துரதிர்ஷ்டவசமாக 4 ரன்னில் தனது முதலாவது இரட்டை சதத்தை நழுவ விட்டார்.

கேப்டன் சன்டிமால் (62 ரன்), டிக்வெல்லா (52 ரன்), தில்ருவான் பெரேரா (58 ரன்) அரைசதம் அடித்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இலங்கை அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 6 விக்கெட்டுகளை அள்ளினார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் ஆட்டநேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com