இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து டிரீம் லெவன் விலக திட்டம்..?


இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து டிரீம் லெவன் விலக திட்டம்..?
x

கோப்புப்படம்

ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி,

சூதாட்டம் மற்றும் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் கேம்களை தடை செய்யும் புதிய கேமிங் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு சட்டமானது.

பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேமிங்கிற்கு தடை விதிக்கப்பட்டதால் டிரீம் லெவன் மற்றும் எம்.பி.எல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளத்தில் பணம் வைத்து விளையாடும் ஆட்டங்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், புதிய ஆன்லைன் விளையாட்டுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள டிரீம் லெவன் நிறுவனம், இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமைக்கான புதிய ஏலங்களை விட பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story