கொல்கத்தா அணி வெற்றி பெற..டு பிளஸ்சிஸ் ஆலோசனை

10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
கொல்கத்தா அணி வெற்றி பெற..டு பிளஸ்சிஸ் ஆலோசனை
Published on

கொல்கத்தா,

10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ் கொல்கத்தா அணி தொடர்பாக அளித்த ஒரு பேட்டியில்,

'நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகத்தில் இருந்தால் ஈடன் கார்டன் மைதான பராமரிப்பாளரை ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றுமாறு கேட்டிருப்பேன். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரின் ஆகிய இரண்டு அபாரமான சுழற்பந்து வீச்சாளர்கள் கிடைத்து இருப்பது கொல்கத்தா அணிக்கு ஒரு வரப்பிரசாத மாகும். தற்போது அவர்கள் இருவரும் சிறந்த சுழற் பந்து வீச்சாளர்களாக விளங்குகிறார்கள். எந்த மாதிரியான ஆடுகளத்தி லும் அவர்களால் சிறப்பாக பந்து வீசி பேட்ஸ்மேனுக்கு சிரமத்தை கொடுக்க முடியும். வருகிற ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணி வெற் றிகரமாக செயல்பட வேண்டுமானால் அவர்கள் இருவரும் சிறப்பாக பந்து வீச வேண்டும். அந்த இரு வீரர்களையும் மனதில் கொண்டு ஆடுக ளத்தை தயாரிக்க வேண்டும்.என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com