துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி: கவேரப்பா அபார பந்துவீச்சு - மேற்கு மண்டல அணி 146 ரன்னில் ஆல் அவுட்...!

துலீப் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மேற்கு மண்டல அணி 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
Image Courtesy: @BCCIdomestic
Image Courtesy: @BCCIdomestic
Published on

பெங்களூரு,

துலீப் கோப்பை கிரிக்கெட்டில் தெற்கு-மேற்கு மண்டல அணிகள் இடையிலான இறுதிப்போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து இருந்தது.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய தெற்கு மண்டல அணி 78.4 ஓவர்களில் 213 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் 22 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேற்கு மண்டலம் தரப்பில் ஷம்ஸ் முலானி 3 விக்கெட்டும், நவாஸ்வல்லா, சின்டான் கஜா, தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கு மண்டல அணி நேற்றைய முடிவில் 45 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து தடுமாறியது. பிரித்வி ஷா (65 ரன்), ஹர்விக் தேசாய் (21 ரன்) தவிர மற்றவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. தெற்கு மண்டலம் தரப்பில் வித்வாத் கவீரப்பா 4 விக்கெட்டும், விஜய்குமார் வைஷாக் 2 விக்கெட்டும் சாய்த்தனர். இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது.

இன்று தொடர்ந்து பேட்டிங் ஆடிய மேற்கு மண்டல அணி 51 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 146 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. மேற்கு மண்டல அணி தரப்பில் ஹனுமா விஹாரி 63 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் மேற்கு மண்டல அணி 67 ரன்கள் பின் தங்கி உள்ளது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தெற்கு மண்டல அணி ஆட உள்ளது. தெற்கு மண்டல அணி தரப்பில் வித்வத் கவேரப்பா 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com