துலீப் கோப்பை கிரிக்கெட்: சதம் விளாசிய ஜெகதீசன்

முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்தது.
பெங்களூரு,
62-வது துலீப் கோப்பை கிரிக்கெட்டில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் (4 நாள்) பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய சிறப்பு மைய மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த மேற்கு அணி 10 ரன்னுக்குள் 2 விக்கெட்டை இழந்து தடுமாறிய போதிலும் ருதுராஜ் கெய்க்வாட் (184 ரன்), தனுஷ் கோடியன் (65 ரன், நாட்-அவுட்) ஆகியோரது அபார பேட்டிங்கால் சரிவில் இருந்து மீண்டது. ஆட்ட நேர முடிவில் மேற்கு அணி 6 விக்கெட்டுக்கு 363 ரன்கள் குவித்துள்ளது.
வடக்கு மண்டல அணிக்கு எதிரான மற்றொரு அரைஇறுதியில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டல அணி தொடக்க நாளில் முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 297 ரன்கள் எடுத்துள்ளது. தனது 11-வது முதல்தர போட்டி சதத்தை அடித்த தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் என்.ஜெகதீசன் 148 ரன்களுடன் (260 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் உள்ளார்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.






