துலீப் கோப்பை: இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா

துலீப் கோப்பை தொடரில் இந்தியா பி - இந்தியா சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது.
image courtesy: BCCI
image courtesy: BCCI
Published on

அனந்தபூர்,

துலீப் கோப்பை தொடரின் 2-வது சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைந்தன. இதில் கெய்க்வாட் தலைமையிலான இந்தியா சி அணி, அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா டி அணியை எதிர்கொண்டது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா சி 525 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இஷான் கிஷன் 111 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா பி 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஈஸ்வரன் 157 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 193 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சில் விளையாடிய இந்தியா சி 128 ரன்கள் அடித்திருந்தபோது 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததன் காரணமாக இந்த போட்டி டிராவில் முடித்து கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com