துலீப் கோப்பை கிரிக்கெட்: கிழக்கு மண்டல அணிக்கு கேப்டனான இஷான் கிஷன்

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப்பொற்றுள்ளன.

வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் (காலிறுதி) போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகளும், இரண்டாவது பிளே ஆப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளன.

இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கிழக்கு மண்டல அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு இஷான் கிஷன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அபிமன்யூ ஈஸ்வரன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கொண்டு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ரியான் பராக் மற்றும் ஆகாஷ் தீப் உள்ளிட்ட வீரர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர்.

கிழக்கு மண்டல அணி விவரம்: இஷான் கிஷன் (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன் (துணை கேப்டன்), சந்தீப் பட்நாயக், விராட் சிங், டேனிஷ் தாஸ், ஸ்ரீதாம் பால், சரண்தீப் சிங், குமார் குஷாக்ரா, ரியான் பராக், உத்கர்ஷ் சிங், மனிஷி, சூரஜ் சிந்து ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ஆகாஷ் தீப், முகமது ஷமி.

கூடுதல் வீரர்கள்: முக்தர் ஹுசைன், ஆஷிர்வாத் ஸ்வைன், வைபவ் சூர்யவன்ஷி, ஸ்வஸ்திக் சமல், சுதிப் குமார் கராமி, ராகுல் சிங்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com