துலீப் டிராபி: இஷான் கிஷன் விலகல் - காரணம் என்ன..?

கோப்புப்படம்
துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் வரும் 28-ம் தேதி முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இதில் மேற்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிப்பொற்றுள்ளன.
வடக்கு மண்டலம், கிழக்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டல அணிகள் பிளே ஆப் (காலிறுதி) போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் முதல் பிளே ஆப் போட்டியில் வடக்கு மண்டலம் - கிழக்கு மண்டலம் அணிகளும், இரண்டாவது பிளே ஆப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் வடகிழக்கு மண்டலம் அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிகள் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளன.
இதையடுத்து இப்போட்டியில் பங்கேற்கும் அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொடருக்கான கிழக்கு மண்டல அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துலீப் டிராபி தொடரில் இருந்து இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளார்.
காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகி உள்ளதாக ஒடிசா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவருக்கு ஆஷிர்வாட் ஸ்வைன் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.






