டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேன் வில்லியம்சன் நியமனம்!

தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகித்த லான்ஸ் குளூஸ்னருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேன் வில்லியம்சன் நியமனம்!
Published on: 

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எஸ்.ஏ.20 தொடருக்கு டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று ஐந்து மாதங்களே ஆன நிலையில், தனது பயிற்சியாளர் பயணத்தைத் தொடங்கவுள்ள வில்லியம்சன், இதற்கு முன்பு 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு SA20 தொடர்களில் டர்பன் அணிக்காக விளையாடி 15 போட்டிகளில் 343 ரன்கள் எடுத்துள்ளார். இதுவரை அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பு வகித்த லான்ஸ் குளூஸ்னருக்குப் பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கேன் வில்லியம்சன்

மேலும், கிரிக்கெட் இயக்குநர் டாம் மூடியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். நியூசிலாந்து அணிக்காக 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9,515 ரன்களையும், 175 ஒருநாள் போட்டிகளில் 7,256 ரன்களையும், 93 டி20 சர்வதேசப் போட்டிகளில் 2,575 ரன்களையும் குவித்துள்ள வில்லியம்சன், தனது அனுபவத்தையும் தலைமைப் பண்பையும் பயிற்சியாளர் பொறுப்பில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2024ஆம் ஆண்டு SA20 தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய டர்பன் அணி, கடந்த சீசனில் 10 போட்டிகளில் மூன்று வெற்றிகளை மட்டுமே பெற்று ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. இந்நிலையில், வில்லியம்சன் தலைமையில் அணி மீண்டும் வலுவான அணியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

X