சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவிப்பு
Published on

ஜமைக்கா,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35-வயதான பிராவோ 164 ஒருநாள் போட்டிகளிலும் 40 டெஸ்ட் போட்டிகளிலும், 66 சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதிரடி பேட்டிங் மட்டும் அல்லாது, சிறப்பாக பந்து வீசுவதிலும் வல்லவரான பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் தனது அசாத்திய திறமையால், இந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பெயரை பெற்று இருந்தார்.

2016 ஆம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராவோ களம் இறங்காமல் இருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், உலகம் முழுவதும் நடைபெறும் பிற வகையான 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக பிராவோ அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com