இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி, சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் விலகல்

இவர் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார்.
லண்டன்,
இந்தியா - இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 12-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஒருநாள் தொடர் நிறைவடைந்ததும் 8 அணிகள் இடையிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர ஆல் ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் முடிவில் தொடை பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய போட்டியில் (2-வது போட்டி) அவர் களமிறங்கவில்லை. காயம் முழுமையாக குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால் அவர் விலகியுள்ளார். இவரது விலகலை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் நேற்று போட்டியின் முடிவில் உறுதி செய்தார்.
இவர் இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் மற்றும் 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






