இங்.வீரர்கள் ஒன்று சேர்ந்தால் ஐபிஎல் போட்டியில் விளையாடலாம்; கெவின் பீட்டர்சன்

இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியும் என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இங்.வீரர்கள் ஒன்று சேர்ந்தால் ஐபிஎல் போட்டியில் விளையாடலாம்; கெவின் பீட்டர்சன்
Published on

கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டது. இன்னும் 31 ஆட்டங்கள் நடத்தப்பட வேண்டி உள்ளது. இவற்றை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏறக்குறைய ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும். எனவே எஞ்சிய ஆட்டங்களை வெளிநாட்டில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் யோசித்து வருகிறது.

இந்த நிலையில் மேலும் ஒரு பின்னடைவாக மீதமுள்ள ஐ.பி.எல். ஆட்டங்களை எங்கு நடத்தினாலும் அதில் இங்கிலாந்து வீரர்கள் சர்வதேச போட்டி காரணமாக பங்கேற்க வாய்ப்பில்லை என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் தெளிவுப்படுத்தியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இங்கிலாந்து வீரர்களுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக சர்வதேச போட்டிகள் உள்ளன. இதனால் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பு இல்லை எனக்கூறியது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன் தனது டுவிட்டரில் பதிவிட்டு இருப்பதாவது: ஐபிஎல் டி20 தொடர் மீண்டும் நடத்தப்பட்டால், தங்களின் சிறந்த வீரர்களை அதில் விளையாடவிடாமல் எவ்வாறு இங்கிலாந்து அணி தடுக்கப் போகிறது என்பதைப் பார்க்கவும், என்ன நடக்கும் என்பதை அறியவும் ஆர்வமாக இருக்கிறது.

நான் இங்கிலாந்து அணிக்கு எதிராக நின்றபோது என்னுடன் யாருமில்லை, தனியாக இருந்தேன். இந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீர்கள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து நின்றால், ஒற்றுமையாக இருந்தால், அவர்கள் ஐபிஎல் டி20 தொடரில் விளையாட முடியும் எனப்பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com