நிதானமாக விளையாடும் இங்கிலாந்து... கிண்டலடிக்கும் இந்திய வீரர்கள்.. வீடியோ வைரல்


நிதானமாக விளையாடும் இங்கிலாந்து... கிண்டலடிக்கும் இந்திய வீரர்கள்.. வீடியோ வைரல்
x

image courtesy:TWITTER

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

லண்டன்,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்ற நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்து வரும் இங்கிலாந்து அணி நிதானமாக ஆடி வருகிறது.

வழக்கமாக 'பேஸ்பால்' என்ற பெயரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்து இந்த முறை பொறுமையாக விளையாடி வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியினரை கிண்டலடிக்கும் வகையில் இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங் செய்தனர்.

அதில் சிராஜ், ரூட்டுக்கு எதிராக ஒரு ஓவர் வீசுகையில் அவரை நோக்கி, "பேஸ், பேஸ், பேஸ்பால். இப்போது பேஸ்பால் விளையாடுங்கள். நான் பார்க்க விரும்புகிறேன்" என்று கிண்டலடித்தார்.

மறுபுறம் பும்ரா பந்துவீசும்போது இந்திய கேப்டன் சுப்மன் கில், "இனி பொழுதுபோக்கு கிரிக்கெட் இல்லை. போரடிக்கும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வாங்க, பாய்ஸ்" என்று இங்கிலாந்து அணியினரை கிண்டலடித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது வரை இங்கிலாந்து அணி 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் அடித்துள்ளது. ஓவருக்கு சராசரியாக 3 ரன்ரேட்டில் மட்டுமே இங்கிலாந்து விளையாடி வருகிறது.

1 More update

Next Story