இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அந்த விஷயத்தில் ஜடேஜா தடுமாறுகிறார் - மொயீன் அலி விமர்சனம்


இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: அந்த விஷயத்தில் ஜடேஜா தடுமாறுகிறார் - மொயீன் அலி விமர்சனம்
x

ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவதாக மொயீன் அலி பாராட்டியுள்ளார்.

லண்டன்,

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் மான்செஸ்டரில் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.

இந்த தொடரில் இந்திய ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை அவர் இன்னும் ஜொலிக்கவில்லை. 3 போட்டிகளில் விளையாடி வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். இது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்வதாக அந்த அணியின் முன்னாள் வீரர் மொயீன் அலி பாராட்டியுள்ளார். ஆனால் பந்துவீச்சை பொறுத்த வரை ஜடேஜா தடுமாறுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த தொடரில் அவர் (ஜடேஜா) என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். அவர் பல வருடங்களாக அதைச் செய்து வருகிறார் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் அவர் பேட்டிங்கில் அற்புதமாக இருக்கிறார். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை, அவர் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் அவரால் விக்கெட் முடியவில்லை. இப்படி இந்த தொடர் முழுவதுமே அவர் பேட்டிங்கில் அசத்தினாலும் முக்கியமான பந்துவீச்சு துறையில் அவர் தடுமாறிவிட்டார் என்று கருதுகிறேன். இப்போது அவர் தனது பேட்டிங்கின் உச்சத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் பந்துவீச்சை பொறுத்தவரை அவரிடம் விக்கெட்டுகள் இல்லை" என்று கூறினார்.

1 More update

Next Story