இங்கிலாந்து அம்பயர் டிக்கி பேர்ட் மறைவு

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட் வயது முதிர்வால் இன்று காலமானார் .
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

லண்டன்,

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல அம்பயர் ஹரோல்ட் டிக்கி பேர்ட் வயது (92). இவர் வயது முதிர்வால் இன்று காலமானார் . இங்கிலாந்தின் யார்க்ஷைரின் பர்ன்ஸ்லே பகுதியைச் சேர்ந்தவர் ஹரோல்ட் டிக்கி பேர்ட். இவர் 1956 முதல் 1965 வரை யார்க்ஷையர் மற்றும் லெய்செஸ்டர்ஷையர் அணிக்காக 93 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 2 சதமடித்துள்ளார்.

1970-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தின் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்ற துவங்கினார். அதன்பின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு அம்பயராக அறிமுகமானார். அது முதல் 66 டெஸ்ட் போட்டி, 69 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி உள்ளார். அதில் 3 உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களும் அடங்கும்.

டிக்கி பேர்டின் துல்லியமான முடிவுகள் மற்றும் அவரது ஸ்டைலால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய பணிக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். டிக்கி பேர்ட் மரணத்துக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com