இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் ஆஷஸ் தொடர்: நாளை தொடக்கம்


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் ஆஷஸ் தொடர்:  நாளை தொடக்கம்
x

image courtesy: twitter/@ICC

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் ஆஷஸ் தொடர் நாளை தொடங்குகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போலவே, மகளிர் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் நாளை தொடங்க உள்ளது.

இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சென்று தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும், ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடுகிறது.

இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது.


Next Story