இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் ஆஷஸ் டி20 தொடர்: இன்று தொடக்கம்


இங்கிலாந்து - ஆஸ்திரேலியா மகளிர் ஆஷஸ் டி20 தொடர்: இன்று தொடக்கம்
x

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாக முழுமையாக கைப்பற்றி முன்னிலையில் உள்ளது.

சிட்னி,

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடர் போலவே, மகளிர் அணிகளுக்கு இடையேயும் ஆஷஸ் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான மகளிர் ஆஷஸ் தொடர் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.

இந்த தொடர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரும், ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரும் நடைபெறுகிறது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாக முழுமையாக கைப்பற்றி ஆஷஸ் தொடரில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது. அதன்படி முதல் டி20 போட்டி சிட்னி மைதானத்தில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு நடைபெறுகிறது.

இனிவரும் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஒன்றில் வெற்றி பெற்றாலும் ஆஷஸ் தொடரை கைப்பற்றி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story